பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
பகவான்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலர் கடை ஒன்றுக்கு சென்று சாராயம் குடித்துள்ளனர். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு கண் பார்வை இழப்பு, வாந்தி, வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன. இதில் ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது., இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.