புத்தரிடம் இருந்து பாடம் கற்று யுத்தத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி ஏதுமில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அபிதம்மா திவாஸ் மற்றும் பாலி மொழியை செம்மொழியாக அங்கீகரிக்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், அமைதியை விட பெரிய மகிழ்ச்சி இல்லை என்று புத்தர் கூறுவதாகவும், பாலி மொழிக்கு உரிய இடம் கிடைக்க ஏழு தசாப்தங்கள் பாடுபட்டு, தற்போது செம்மொழி அந்தஸ்து கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட பழங்கால பாரம்பரிய கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.