சென்னை மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்லும் சாலையில் 3வது நாளாக குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி சென்னையில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் செல்லக்கூடிய சாலை முழுவதும் 3 நாட்களாக மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்களை இயக்க முடியாமலும், நடமாட முடியாமலும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே நீர் தேங்குவதற்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.