கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் 11 பேருக்கு ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே கடந்த 11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது.
தண்டவாளத்தில் இருந்த போல்டு கழன்றதால் ரயில் விபத்து ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஏற்கனவே 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொறியாளர், உதவி பொறியாளர் உட்பட 11 பேர் ஆஜராக வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.