வங்கதேச அகதிகள் அசாமில் குடியேற அங்கீகாரம் வழங்கும் 6-ஏ சட்டப்பிரிவு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
குடியுரிமை சட்டத்தின் 6 ஏ பிரிவு வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
1966-முதல் 1977 ஆண்டுக்கு இடையே அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டு இருந்தது. குடியுரிமை சட்டம் 1955 ன் 6 ஏ வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்தரேஷ், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6 ஏ சட்டப்பிரிவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மொத்தம் 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தார். மற்ற 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர்.
இதன்மூலம் அசாமில் 1966ஆம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.