நீதிமன்ற உத்தரவை அடுத்து கொடைக்கானல் சுங்கச்சாவடியில் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வருகிறார்களா என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான நீலகிரி மற்றும் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம், சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என ஆய்வு செய்ய, ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து கொடைக்கானல் நுழைவாயில் உள்ள சுங்கச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.