திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே கனமழையின்போது மின்சாரம் தாக்கிய கோயில் பூசாரியை, பொதுமக்கள் காப்பாற்றினர்.
புழல் வள்ளுவர் நகரில் வரசக்தி விநாயகர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் இந்த கோயிலை சுற்றி மழைநீர் தேங்கியது.
மேலும், கோயிலின் இரும்பு கதவில் மின்கசிவும் ஏற்பட்டிருந்தது. இதனை அறியாத கோயில் பூசாரி, கோயில் கதவை திறக்க முயற்படவே, அவரை மின்சாரம் தாக்கியது.
இதனை கண்ட பொதுமக்கள், அவரை மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்றினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..