டெல்லியில் யமுனை நதியில் கழிவுநீர் கலப்பதால் நச்சுநுரை படர்ந்து காணப்படுகிறது.
இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் யமுனை நதி, இமயமலையில் உற்பத்தியாகி டெல்லி, ஆக்ரா வழியாக பாய்ந்தோடுகிறது.
பண்டிகை நாட்களில் பக்தர்கள் புனித நீராடும் யமுனை நதியில் தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற கழிவுகள் அதிகளவில் கலப்பதால் நச்சுநுரை படர்ந்து காணப்படுகிறது.
டெல்லியின் தண்ணீர் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் யமுனை நதியில் நச்சுநுரை பொங்க தண்ணீர் செல்வது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.