நாட்டின் வளர்ச்சியிலும், ஏழை எளியவர்களின் மேம்பாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் என்.டி.ஏ கூட்டணி சார்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்கள் பயனாளிகளிடம் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி அப்போது கேட்டுக்கொண்டார்.
மேலும் மக்கள் நலன் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் பிரதமர் ஆலோசித்தார். இந்த கூட்டம் தொடர்பாக் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், மத்தியிலும் மாநிலத்திலும் சிறந்த நிர்வாகத்தை நடத்தி, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த ஆக்கப்பூர்வமான கருத்துகள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.