உழைப்பு கேற்ற ஊதியம் கேட்டு டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள், கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடலூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு முன்கள பணியாளர்களாக 69 பேர் பணியாற்றி வருகின்றனர்.
பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தினக்கூலியாக 350 முதல் 470 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் தங்களுக்கு நாளொன்றுக்கு 200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும், கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.