திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தக்காளி ஷீட் என்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளை கண்டுபிடித்த துணை ஆசிரியர் ஒருவர் அதனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
தனியார் கல்லூரியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையின் துணை பேராசிரியராக பணியாற்றும் சங்கீதா என்பவர் இதனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம் முன்னிலையில் இந்த தக்காளி தாள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வகையான தக்காளி தாள்கள் 3 மாதத்திற்கு கெடாமல் இருக்கும் என்றும், உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் துணை பேராசிரியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.