பட்டாசு தொழிலுக்கு தமிழக அரசு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், தற்போது சுள்ளான்கள் அரசியலுக்கு வந்துவிட்டு, தாம் தான் அடுத்த எம்.ஜி.ஆர். என கூறுவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு வருவாய்த்துறை, வணிக வரித்துறை, தீயணைப்பு துறை என அனைத்து வழிகளிலும் அரசு நெருக்கடி ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்