ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி நகரில் அமைந்துள்ள சத்ய சாய் பாபா ஆசிரமத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் புட்டபர்த்தி நகரில் அமைந்துள்ள சத்ய சாய் பாபாவின் முக்கிய ஆசிரமம் மற்றும் சமாதி மந்திர் பிரசாந்தி நிலையம்.பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற பிரசாந்தி நிலையத்திற்குச் சென்றதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.