மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்காக 99 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேரதல் நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா ஷிண்டே பிரிவு கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழலில், அதிகாரத்தை தக்கவைப்பதில் அந்தக் கூட்டணி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது
இந்நிலையில் 99 பேர் முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாக்பூர் (தென் மேற்கு), மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே கம்தி தொகுதியிலும், அமைச்சர் கிரீஷ் மகாஜன் ஜாம்னரிலும் போட்டியிடுகின்றனர். அமைச்சர் சுதிர் முங்கண்டிவார் பல்லார்பூர் தொகுதியில் களம் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.