இன்று பிறந்தநாள் கொண்டாடும் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது :இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாண்புமிகு மகாராஷ்டிர மாநில ஆளுநர் அன்புக்குரிய சகோதரர் சிபி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியமும், வாழ்வின் அனைத்து விதமான மகிழ்வும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான, அன்பு அண்ணன் சிபி.ராதாகிருஷ்ணன்
அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் சிபி.ராதாகிருஷ்ணன்அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தமது மக்கள் பணி தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.