தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால், சேலத்தில் முதலமைச்சரின் கான்வாய் பாதையில் பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
விளையாட்டு வாகனங்களை வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி சேலத்திற்கு வருகை தந்தார். அப்போது முதலமைச்சர் உத்தரவை மதிக்காமல், கான்வாய் பாதையில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சாலை மார்க்கமாக சென்ற முதலமைச்சரின் கான்வாய் பாதையில் பெண் போலீசாருக்கு பணி ஒதுக்கப்படவில்லை.