கடலூர் மாவட்டம், சி.என்.பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சொக்கநாதர் மற்றும் ஶ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, சுப்பிரமணிய சாமி சன்னதி அர்த்தம் மண்டபத்தில் கருங்கற்களால் தரை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கோயிலில் சுமார் 10 அடி அகல பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்து சமய அறநிலை துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த அறை, விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.