தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதற்காக உலகம் முழுவதும் இருந்தும் வருகை தரும் பக்தர்கள், கோயில் வளாகத்தில் ஆறு நாட்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வது வழக்கம்.
இதற்காக சுமார் 18 இடங்களில், 6 ஆயிரத்து 500 பேர் தங்கக்கூடிய வகையில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டுள்ளன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நவம்பர் 7ஆம் தேதி மாலை கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.