தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா உதயநிதி? நாராயணன் திருப்பதி கேள்வி!
Sep 15, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா உதயநிதி? நாராயணன் திருப்பதி கேள்வி!

Web Desk by Web Desk
Oct 25, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக அமைச்சர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்வாரா என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து முறையின்றி பாடப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ‘திராவிடம், திராவிடம்’ என்று சொல்லி திட்டமிட்ட ரீதியில் தமிழை அழிக்க துடிக்கும் திமுகவின் கனவு பலிக்காது.

‘என் இனிய தமிழ் மொழியை’ அதிகாரத்தை கொண்டு அழித்து விடலாம் என நினைத்தால் அதை எதிர் கொண்டு தமிழ் மொழியை காப்போம். ஆங்கில மோகத்தில் திளைத்திருக்கும் இவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தில் தமிழின் புகழை மறைக்க ‘புகழ்’ என்ற சொல்லை நீக்கி ‘திகழ்’ என்று பாட வைத்திருப்பதும், திராவிட நல் திருநாடும் என்பதில் ‘திருநாடும்’ என்ற சொல்லையும் நீக்க வைத்து தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்தி விட்டனர்.

இதன் மூலம் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து, அவதூறு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.பாஜக வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழ்த்தாய் வாழ்த்தை திமுகவால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை திணிக்க பல்வேறு வகைகளில் முயற்சி செய்கின்றனர் இவர்கள். நேரடியாக ஆங்கிலத்தை திணிக்க முடியாததால் தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை நீக்குகின்றனர்.( கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி தான் உதயநிதி பொங்கியெழுந்து கூறினார்)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்தில் ஒரு வரியை பாட மறந்த போது, அது ஆளுநரால் திட்டமிட்டு நடைபெற்றது என்று குற்றம் சாட்டியதோடு, அவரை நீக்க வேண்டும் என்றும் விலக வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கோரியிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் இந்த அதிர்ச்சி தரும் வகையில் தமிழ் தாய் வாழ்த்தை சிறுமைப் படுத்தும் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

ஆளுநரை நீக்க வேண்டும் என்று சொன்னவர்கள், உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு அவமரியாதை செய்து விட்டார் என்று விமர்சனம் செய்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க குரல் கொடுப்பார்களா? அல்லது தமிழை அவதூறு செய்ததற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags: udayanithi stalinTamil Nadu BJP State Vice PresidentDMKRN RaviNarayanan Tirupathitamilthai valthu issue
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து ஸ்டாலின் பதில் என்ன? – டிடிவி தினகரன் கேள்வி!

Next Post

தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து : மு.க.ஸ்டாலின் பதில் என்ன? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Related News

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

பஞ்சாப் : வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட நபருடன் கணவர் வாக்குவாதம்!

அமெரிக்கா : சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தி வரும் பொதுமக்கள்!

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies