தாங்கள் எரிகின்ற பந்து மீண்டும் அதே வேகத்தில் தங்களை தாக்கும் என்பதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, தூர்தர்ஷன் நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இனவாத அரசியலை ஊக்குவித்து, இனச்சாயாம் பூசி திமுக டுவீட் செய்ததாக தெரிவித்தார்.
ஆளுநரை மாற்ற வேண்டும் என அறிக்கை விடும் முதல்வர், இன்று உதயநிதி ஸ்டாலின் தவறை சுட்டிக்காட்டுவாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நீங்கள் எரிகின்ற பந்து, அதே வேகத்தில் உங்களை வந்து அடிக்கும் என்பதை திமுகவினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஹெச்.ராஜா கூறினார்.