நடிகர் தனுஷ் மிகவும் ஒழுக்கமானவர் என நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் அவரது தங்கை கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் மீது தவறான கிசுகிசுக்களும் குற்றச்சாட்டுகளும் பரவுவதாக தெரிவித்தார்.
இவை அனைத்தும் பொய்யானவை என்று கூறிய துஷாரா விஜயன், தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர் என்றும் நடிப்பின் மீது அவர் அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.