ஆரிய – திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மத்தியில், கல்வித்துறை ஆரிய – திராவிட இனக் கொள்கையை பரப்புவதை நிறுத்த உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆரிய – திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என கூறினர்.
இரு கொள்கைகளும் தவறானதா? செல்லுமா? செல்லாதா என்பதை ஆராயாமல் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கை மனுதாரரின் கோரிக்கை மனுவாக கருதி, அதை 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மாநில, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.