லப்பர் பந்து படக் குழுவினரை நேரில் சந்தித்து நடிகர் சிம்பு பாராட்டு தெரிவித்தார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படம் வரும் 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் தமிழரசன், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
















