ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகரான லியானார்டோ டிகாப்ரியோ, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து விலக்கியதற்காக குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பை அவர் விமர்சித்தார்.
‘டைட்டானிக்’, ‘ஷட்டர் ஐலேண்ட்’, ‘இன்செப்ஷன்’ என புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, நடிப்பு தவிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வுக்காகவும் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.