எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர் என்றும், எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவில் எலான் மஸ்க் தயாரித்து ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட், சமீபத்தில் மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பியதை நினைவு கூர்ந்தார்.
அனைவரது கவனமும் எலான் மஸ்க் மீதுதான் இருப்பதாக கூறிய சோம்நாத், அவரை வெல்வதற்கான சில அருமையான யோசனைகள் உள்ளதாகத் தெரிவித்தார்.