தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டு சந்தைகள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில், எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
ஒட்டுமொத்தாக 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை குறைவான அளவிலேயே ஆடுகளை விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.