சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீரை நவம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கானது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்த வழக்கை விசாரித்த சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஜாபர் சாதிக் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் நவம்பர் 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டனர்.
















