கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் திருவிழாவில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 150 பேர் காயம் அடைந்தனர்.
காசர்கோடு அருகே நீலேஸ்வரம் பகுதியில் உள்ள கோயிலில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு நேரம் கோயில் அருகே உள்ள பட்டாசு கிடங்கில் திடீரென தீப்பற்றி பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில், 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.