சேலம் – கோவை வழித்தடத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கடந்த அக்டோபர் 14-ம் தேதி போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கொண்ட குழு உணவகங்களில் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கூடுதல் விலை நிர்ணயம், குடிநீர், கழிவறை வசதிகளில் குறைபாடு ஆகியவை தெரியவந்ததாகவும், அதன் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் 50 சாலையோர உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.