திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியில் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை, திருவொற்றியூரில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் கடந்த 25 ஆம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
பின்னர் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே மாசுக்கப்பட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காற்றின் தரம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.