நெல்லை மாவட்டம், திசையன்விளையில் திருமணமான இளம் பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காமராஜ் நகரைச் சேர்ந்த லட்சுமி பிரியா என்பவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்நிலையில் கணவர் ரமேஷ் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், திசையன்விளை தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்ட உறவினர்கள், இளம்பெண் மரணத்தில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர்.