திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் எங்குமே நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை என சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக சசிகலா மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் முல்லை நகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கிய நிலையில், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா ஆட்சியில் ஒரு அமைச்சர் ஒரு துறையை கவனித்தபோது பிரச்னை இல்லை எனவும், தற்போது ஒரே அமைச்சர் 3 துறைகளை கவனிப்பதாகவும் கூறினார்.