தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று மூன்றரை நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வார விடுமுறை மற்றும் விழாக் காலங்களில் மெட்ரோ ரயில்களை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ வழித் தடங்களில் வழக்கமாக 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், பயணிகளின் வசதிக்காகவும் இன்று மூன்றரை நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.