தீபோத்ஸவத்தை முன்னிட்டு அயோத்தி சரயு நதிக்கரையில் 25 லட்சம் அகல் விளக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தீபாவளியையொட்டி, ஆண்டுதோறும் அயோத்தி சரயு நதிக்கரையில் தீபோத்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டும் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. நாளை நடைபெறும் தீபோத்ஸவ உற்சவத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று தீபம் ஏற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.