திருச்சி மாவட்டம் துறையூரில் குட்கா கடத்தி வந்த 2 வட இந்தியர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
துறையூருக்கு வெளிமாநிலத்தில் இருந்து காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பிலியபுரம் பகுதியில் சென்ற காரை போலீசார் நிறுத்த முயன்ற நிலையில், முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து சிக்கதம்பூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காரில் குட்கா கடத்தப்படுவதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் பாலக்கரை பகுதியில் அந்தக் காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து காரில் குட்கா கடத்தி வந்த 2 வடமாநில நபர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, காரில் குழந்தை கடத்தப்படுவதாக போலி தகவல் பரவியதால் பொதுமக்கள் காரை அடித்து சேதப்படுத்தினர்.