விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க. மாநாடு வெற்றி பெற்றதாக, தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள அவர், விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மக்களுடன் சேர்ந்து தொண்டர்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம் என தெரிவித்துள்ள விஜய், எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்து 2026-ல் இலக்கை அடைவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் தன் மீது வைத்த பாசத்திற்கு இணையாக உலகில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள விஜய், அரசியல் பயணத்தை தொடங்கும் முன்னர் நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.