அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை உதயநிதி அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி, கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா என கேள்வி எழுப்பியது. டி-ஷர்ட் என்பது கேஷுவல் உடையா என்றும், அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.