மலேசிய முருகன் கோயிலுக்கு அனுப்பி வைப்பதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பிரம்மாண்ட வேல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மலேசியா கிலாங்கில் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது .இந்த ஆலயத்தில் கொடி மரம் போல் வேல் அமைக்கப்பட உள்ளது.
அதனை தயாரிக்கும் பணி நாச்சியார்கோயில் பகுதியில் நடைபெற்று வந்தது. விக்னேஷ் என்பவரின் பட்டறையில் தயாரிக்கப்பட்ட இந்த வேல் 15 அடி உயரமும் 275 கிலோ எடையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாட்களில் இந்த வேல் மலேசியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார்.