தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், உலகம் முழுவதும் வசித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி குறிக்கிறது.
அன்னை லட்சுமி நம் இதயங்களை அளவற்ற அன்பு மற்றும் ஆழ்ந்த இரக்கத்தால் ஒளிரச் செய்து, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், செழிப்பு, சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வளர்த்து அருள்புரிவாராக. உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.