தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உரிமம் இல்லாமல் திறக்கப்பட்ட பட்டாசு கடையை போலீசார் அடைத்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சங்கரன்கோவில் பகுதியில் திமுக நிர்வாகி சரவணன் என்பவர் உரிமம் பெறாமல் பட்டாசுக்கடை நடத்தி வருவதாக தகவல் கிடைத்தது, அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கடையை மூட உத்தரவிட்டு அவரை எச்சரித்து சென்றனர்.