பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெ.ச் ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த தினமும், 62வது குருபூஜை விழாவும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ஆகியோர் மதுரையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பசும்பொன் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா மற்றும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.