நாட்டின் உயர்மட்ட பாதுகாப்புப் பிரிவினரும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் பாதுகாப்பு படை தளபதிகளும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போர்ட் பிளேயரில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டளைப் பகுதியில் பாதுகாப்புப் படைத் தளபதி, ஜெனரல் அனில் சௌஹான், ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி, அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடுகிறார். ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சருடன் அங்கு சென்றுள்ளார்.
கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி குஜராத்தில் உள்ள போர்பந்தரில் கடற்படைத் துருப்புக்களுடன் திருவிழாவைக் கொண்டாடுகிறார்,
இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் ஜம்மு காஷ்மீர் செக்டரில் ராணுவ வீரர்களுடன் விழாவைக் கொண்டாடுகிறார்.
துருப்புக்களுடன் பிரதமர் தீபாவளியைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தசராவை முன்னிட்டு ராணுவ வீரர்களுடன் சாஸ்திர பூஜை அல்லது ஆயுத பூஜை செய்யும் போக்கைத் தொடங்கினார்.
அவர் 2019 இல் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், இந்திய விமானப்படைக்கு முதல் ரஃபேலைப் பெறுவதற்காக பிரான்ஸ் சென்றபோது அதைத் தொடங்கினார்.
ராணுவத் தளபதி உட்பட பல மூத்த அதிகாரிகள் சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் துருப்புக்களுடன் தசராவைக் கழித்தனர்.