தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் திருச்சியில் உள்ள பட்டாசு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் 80-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பசுமை பட்டாசுகள், குஜிலி பட்டாசுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் கடைக்கு வந்த பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமிய மக்களும் பட்டாசுகள் வாங்க அதிக ஆர்வம் காட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.