இந்திய விடுதலைக்காக போராடியவர் முத்துராமலிங்க தேவர் என தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் சுபாஷ் சந்திர போஸின் படையை வலுப்படுத்த துணை நின்றவர் முத்துராமலிங்க தேவர் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர் என புகழாரம் சூட்டியுள்ள விஜய்,. தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக முத்துராமலிங்க தேவர் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம் என்றும் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.