விழுப்புரத்தில் சாலையில் கொட்டிய டீசல் மீது தீயணைப்புத் துறையினர் நுரையை தெளித்து அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விழுப்புரம் அருகே டீசல் டேங்கில் ஓட்டை விழுந்து சுமார் 400 லிட்டர் டீசல் சாலையில் வழிந்தோடியது.
இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் சாலை முழுவதும் பரவி கிடந்த டீசல் மீது சோப்பு நுரையை தெளித்து அகற்றினர்.