தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் நள்ளிரவு முதலே இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் ஏராளமான பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டத்தை உற்சாகமாக தொடங்கினர்.
அதேபோல, மதுரை மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள விகேபி நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பண்டிகை நாளை குடும்பத்துடன் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.