பண்டித ஜவஹர்லால் நேருவுக்காக சர்தார் வல்லபாய் படேல் பிரதமர் பதவியை தியாகம் செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
படேல் பிறந்த நாளையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற எண்ணியபோது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதாகவும், இதில் 15 பிரதேச நிர்வாகிகளில் 12 பேர் படேலுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவராக வருபவரே இந்திய பிரதமராக வாய்ப்பு இருந்ததால், இந்தத் தேர்தல் முடிவு நேருவுக்கு அதிர்ச்சியளித்ததாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் காந்தி கூறியதற்கு இணங்க பிரதமர் பதவியை படேல் விட்டுக்கொடுத்ததாக தெரிவித்தார்.
(பைட்)