பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், விபூதி பூசாமல் சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி கொண்டாடப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு நடைபெற்ற குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், தேவர் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆனால், விபூதி பூசாமல் அவர் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் விபூதியை நெற்றியில் பூசினர். இவற்றை முதலமைச்சருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.