புதுக்கோட்டை அருகே மத்தாப்பு கொளுத்தியபோது ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த அத்தியாவசியப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன் தனது மகன் மற்றும் மகளுக்கு மத்தாப்பு வாங்கி கொடுத்துள்ளார். சிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தி விளையாடியபோது தீப்பொறி கட்டிலில் இருந்த துணி மீது விழுந்து தீ மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படாத நிலையில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.