ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் சாலையோர வியாபாரிகளிடம் அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி பொருட்கள் வாங்கினார்.
தீபாவளியையொட்டி, கடை வீதிக்கு தனது மனைவியுடன் சென்ற அவர், சாலையோர வியாபாரிகளிடம் பணம் கொடுத்து பலகாரங்களை வாங்கினார்.
உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியதற்கு இணங்க ஒடிஸா முதலமைச்சர் சாலையோர வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கினார்.